சென்னையில் கொரோனாவுக்கு மருத்துவர் பலி


சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட மகாகவி பாரதி நகர் 6வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (55). இவர் மகாகவி பாரதி நகர் 13வது குறுக்கு தெருவில் 30 ஆண்டுகளாக சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவத்திற்கான மருத்துவமனையை நடத்தி வந்தார்.


இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.


அங்கு அவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மகளும் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.