மெகா ஸ்டார் சகோதரருக்கு கொரோனா.


தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. தற்போது அவருடைய மகன் ராம் சரண் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ஜொலித்தாலும் அவருகே டஃப் கொடுக்கும் அளவிற்கு அசத்தி வருகிறார் சிரஞ்சீவி.


அதேபோல் மகன் ராம் சரணை விட அப்பா சிரஞ்சீவிக்கு தான் ரசிகர்கள் பட்டாளமும் ஏராளமும். கொரட்டாலா சிவா எழுதி இயக்கும் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.


இதை அவருடைய மகன் ராம் சரண் தான் தயாரிக்கிறார். ஒட்டுமொத்த வீடே கலைக்குடும்பாக இருக்கும் சிரஞ்சீவி வீட்டிலும் கொரோனா புகுந்து வேதனை கொடுத்துள்ளது. 


கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இவர்கள் தான் என்றில்லாமல் சகட்டுமேனிக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


திரையுலகைப் பொறுத்தவரை அமிதாப் பச்சனில் ஆரம்பித்து தற்போது பிரபல பாடகர் எஸ்.பி.பி.வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.


தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், பிரபல நடிகருமான நாகபாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து நாகபாபுவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.