முதல் MSS- பி‌றகு SPB கிரெம்ளின் அரண்மனை


முதல் MSS, பி‌றகு SPB  RUSSIA  மாநில கிரெம்ளின் அரண்மனையில் நிகழ்த்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்


மாஸ்கோ, கிரெம்ளின் அரண்மனையில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அடுத்தபடியாக நிகழ்த்திய இரண்டாவது (பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ) இந்தியர் ஆவார்.


2016 நவம்பர் 6ம் தேதி மாஸ்கோவில் உள்ள மாநில கிரெம்ளின் அரண்மனையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சி நடத்தினார்.


உள்ளூர் இந்திய சமூகத்தின் விளக்குவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


எஸ்.பி.பி கிரெம்ளின் அரண்மனையில் பாடிய  இரண்டாவது இந்தியர்.. முதலில் மறைந்த கர்நாடக சங்கீத வித்வான் எம்.எஸ்.சுப்புலட்சுமிதான்  என்று கூறினார்.


தற்செயலாக, திரையுலகில் ஒரு பாடகராக எஸ்.பி.பி.யின் 50 வது ஆண்டு நிகழ்ச்சி ஆகும்.


1966-ல் அவரது வழிகாட்டி எஸ்.பி.கொத்ததண்டபாணி இசையமைத்த ஸ்ரீ ஸ்ரீ மரியதா ராமண்ணா என்ற தெலுங்குபடத்தில் ஒரு பாடல் மூலம் பாட அறிமுகமானார்.


நிகழ்ச்சி பற்றி( Badava Gopi) கோபி கூறுகையில், எஸ்.பி.பி.,க்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசை, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


நீண்ட காலமாக அவரது கச்சேரிக்கு  ஒரு மதிப்புமிக்க அரங்கம் மாஸ்கோ, கிரெம்ளின் அரண்மனை.


ரஷ்யாவில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் இருந்தாலும், தமிழ் பேசும் மக்கள் தொகை அங்கு மிகக் குறைவாகவே உள்ளது. இதை மனதில் வைத்து, தமிழ், இந்தி பாடல்களை பாடினார்..


இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சில ரஷ்ய ப்பாடல்களை அவர் பெல்ட் செய்து .பாடினார்..அவருக்கு சில பாடல்கள் கொடுக்கப்பட்டு  இருந்தன. 


ரஷ்ய நடனக் கலைஞர்களும் தமிழ்ப் பாடல்களுடன் சிறப்பு இசை நிகழ்ச்சி நிகழ்த்தினார்கள்.


எஸ்.பி.பி.சரண், எஸ்.பி ஷைலஜா, மாளவிகா ஆகியோர் எஸ்.பி.பி.யுடன் இணைந்து பாடினார்கள்.


இசைக் குழுவில் ஒரு குறிப்பிட்ட குழுவைத் தேர்வு செய்யாமல், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறந்த  இந்த இசை நிகழ்ச்சிக்கு பாடகர் தேர்ந்தெடுத்து பாடினார்கள்.


இது நான்கு மணி நேர கச்சேரியாக இருந்தது.


 


தொகுப்பு மோகனா செல்வராஜ்