லடாக்கின் நிலநடுக்கம்

 லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.


லடாக்கில் இன்று பிற்பகல் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது லடாக்கின் லேவில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கம்  10 கி.மீ. ஆழத்துடன் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை, ஜம்மு-காஷ்மீரில் பகுதியில் இதே போல் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுளது.


மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.