மோசமான பக்கவிளைவு: கரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்


உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு  அவை பரிசோதனையில் உள்ளது.


அவற்றில் ஒன்றுதான்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட்.


ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனெகா கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலருக்கு விளக்கமுடியாத உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால், தடுப்பு மருந்து சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


உலக அளவில் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இந்த நிறுவனத்தின் தடுப்பூசிதான் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


கோவிஷீல்ட் பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீரம் நிறுவனம் சார்பில் இந்தியாவில் பல இடங்களில் பரிசோதனை நடைபெற்றது. பல நாடுகளில் பக்க விளைவு காரணமாக பல நாடுகளில் கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.