அமைச்சர் உதவியாளர் காரில் கடத்திய மர்ம கும்பல்

 திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவர் இருக்கிறார்.


இவர், 23.09.2020 காலை உடுமலைப்பேட்டையில் அன்சாரி வீதியிலுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அலுவலகத்திற்குள் நுழைந்து, கர்ணனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.


அலுவலகத்திற்குள் புகுந்து உதவியாளரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து திருப்பூர் எஸ்.பி. திஷா மிட்டல் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அமைச்சரின் உதவியாளர் கர்ணன் கடத்தப்பட்டது சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது. அதில், 4 இளைஞர்கள் அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து கர்ணனை காரில் கடத்தி செல்கின்றனர்.