நீட் தேர்வை ரத்து செய்ய நூதன போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை நடத்தி வருவதாக கூறும் அதிமுக  அரசு, நீட்தேர்வு குறித்து உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் தஞ்சை ரயிலடியில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மனு  கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கி உயிர்ப்பலி ஏற்பட காரணமாக உள்ள நீட் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய  வேண்டுமென கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்த வந்த போலீசார், ஜெயலலிதா சிலையிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என  கூறினர்.


அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக  கைது செய்தனர்.