அரசியல் ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை - ரஜினி ரசிகர்கள்


அரசியல் மாற்றம்.  ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை மாற்றத்தைப் பற்றி சிந்திக்கும் மக்களும் மக்களைப் பற்றி சிந்திக்கும் நீங்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் 30 ஆண்டுகால விருப்பம். 1996ஆம் ஆண்டு முதலே அவரை அரசியலுக்கு அழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.


ஆனால் ரஜினிகாந்த் அவ்வப்போது வாய்ஸ் கொடுத்ததோடு சரி அதன்பின்னர் சினிமாவில் நடிக்க போய்விடுவார் ரஜினிகாந்த். கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.


ஆனாலும் 3 ஆண்டுகளாக ரஜினியின் செயல்பாடு குறித்து மற்றவர்கள் பேசினாலும் உறுதியாக ரஜினி எதையும் கூறவில்லை. ஆன்மீக அரசியல் நேர்மையான ஊழலற்ற அரசியலில் ஈடுபடப்போவதாக கூறி வருகிறார் ரஜினிகாந்த்.