அமிர்தசரஸில் விவசாயிகள்போராட்டம்

 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது.


இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில்  இருந்தே பஞ்சாப், ஹரியானா  மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இரு அவையிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.