தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு

 தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு நாளை துவங்குகிறது. கொரோனா பீதியால் ஆசிரியர்கள் பணிக்கு வர தயக்கம் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு, நாளை தொடங்கி 28ம் தேதி வரை நடக்கிறது.


2ம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 29ம் தேதி தொடங்கி அக்.7 வரை  நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 5,400 நேரடி தேர்வர்களும், 11 ஆயிரத்து 350 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.


தேர்வு மையங்களில் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.