மெட்ரோ ரயில் சேவை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


இந்நிலையில்,  மத்திய அரசு கடந்த வாரம் நான்காம் கட்ட தளர்வுகளை அறிவித்தது. அதில், மெட்ரோ ரயில் சேவை வருகிற செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயங்க அனுமதி என என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.


அதன்படி, பயணிகள் மாஸ்க் அணிந்து இருப்பதை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதிப்படுத்தவேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே பயணிகளை  ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கவேண்டும் . மேலும், தொற்று அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே ரயில் நிலையங்களில் அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.