இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு


இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டு பழமையை ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட குழுவை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி  நியமித்து உத்தரவிட்டார்.


ஆனால், மத்திய அரசு அமைத்த கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய நிபுணர்கள் இடம்பெறவில்லை என புகார் எழுந்த நிலையில், தற்போது அந்த குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.