மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உயிரிழப்பு

 மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு 


தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பொறுப்பாசிரியராக இருந்தவர், பத்திரிகையாளர் சுதாங்கன். இவர் தினமணி நாளேடு, தமிழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி, பல தொலைக்காட்சிகளிழும் அவர் பணியாற்றி வந்தார்.


வீட்டில் இருக்கும்போது, தவறி விழுந்து தோளில் பலமான அடி ஏற்பட்டதாக கூறப்பட்டது. சுதாங்கன் அழைப்பின் பேரில் அவரது நண்பர் அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார்.


உடனடியாக அவரை அப்போல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. 


இவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதைத் தொடர்ந்து மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


திரு. சுதாங்கன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கும், வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.