சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ கரோனா தொற்று

 இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக் கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது.


தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன். இவருக்கு அண்மையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மா.சுப்பிரமணியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


மேலும் அவருடைய மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மா.சுப்பிரமணியன் 2006ஆம் ஆண்டு முதல் 2011 வரை சென்னை மாநகர மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.