பஞ்சபூதத் தலங்கள் - ஆகாயத்தலம் பகுதி 5

பஞ்சபூதத் தலங்கள் -    ஆகாயத்தலம்


சிதம்பரம் நடராசர் கோயில்


தில்லை - தில்லை மரங்கள் இருந்த காட்டுப் பகுதி. சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூஜை செய்ததால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித்தம் - இதயம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித்தம் + அம்பரம் - சிதம்பரம். என்ற பெயரே காலப்போக்கில் அந்த ஊர் பெயர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக சிதம்பரம் என்று மாறிவிட்டது


ஆறு கால பூசை


சிதம்பரம் நடராசருக்கு தினந்தோறும் ஆறு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.


ஆறு கால பூசையென்பது, 1. காலை சந்தி

 2. இரண்டாங் காலம்

 3. உச்சி காலம்

 4. சாயங் காலம்

 5. ரகசிய பூசை காலம்

 6. அர்த்த சாமம்


ஆண்டுக்கு ஆறு அபிசேகங்கள்


இந்து தொன்மவியல் கணக்கின் படி மனிதர்களது ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.


ஒரு நாளில் ஆறு கால பூசைகள் நடைபெறுவது போல தேவர்கள் செய்யும் பூசையாக ஆண்டுக்கு ஆறு பூசைகள் சிதம்பரம் கோவிலில் நடைபெறுகின்றன.


அவையாவன.. 1. சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிசேகம்

 2. ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்தில் இராச சபையில் அதிகாலையில் அபிசேகம்

 3. ஆவணி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிசேகம்

 4. புராட்டாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிசேகம்

 5. மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபையில் அதிகாலையில் அபிசேகம்

 6. மாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிசேகம்


பாடல் பெற்ற தலம்  நால்வர்


சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது.


மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது.


இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.


தமிழகத்திலுள்ள கோவில்களில் அதிகமான நூல்களினாலும், பாடல்களினாலும் போற்றப்படுகின்ற கோவிலாக சிதம்பரம் நடராசர் கோயில் உள்ளது.


இத்தலத்தினைப் பற்றி நாற்பத்தி மூன்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு. 1. தேவாரம் - 11 திருப்பதிகங்கள்

 2. திருவாசகம் - 25 திருப்பதிகங்கள்

 3. திருக்கோவையார்

 4. திருமுறைக் கண்ட புராணம்

 5. திருவிசைப்பா

 6. திருபல்லாண்டு

 7. திருமந்திரம்

 8. கோயில் நான்மணிமாலை

 9. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

 10. பெரியபுராணம்

 11. சிதம்பரம் மணிக்கோவை

 12. சிதம்பரச் செய்யுட் கோவை

 13. சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை

 14. தில்லைக்கலம்பகம்

 15. தில்லையுலா

 16. மூவருலா

 17. தில்லை யமகவந்தாரி

 18. சிதம்பரவெண்பா

 19. சிதம்பர சபாநாத புராணம்

 20. பாண்டிய நாயக முருகன் பிள்ளைத் தமிழ்

 21. புலியூர் வெண்பா

 22. நடேசர் திருவருட்பா

 23. நடராச திருவருட்பா

 24. நடராசர் சதகம்

 25. நடராசர் திருப்புகழ்

 26. சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்

 27. சேக்கிழார் புராணம்

 28. சிவகாமியம்மைப் பதிகம்

 29. தில்லை கற்பக விநாயகர் வெண்பா அந்தாதி

 30. தில்லை நவமணி மாலை

 31. சிதம்பர விலாசம்

 32. பரமரகசிய மாலை

 33. திருவருட்பா

 34. தில்லைத் திருவாயிரம்

 35. புலியூர் புராணம்

 36. சிதம்பரப் புராணம்

 37. நடராஜர் காவடிச்சிந்து

 38. நடராசர் பத்து

 39. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்

 40. சிதம்பரம் பட்டியல்

 41. முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்

 42. சிதம்பரம் சிவகாமியம்மை பஞ்சரத்தினம்

 43. தில்லை பாதி நெல்லை பாதி


நாளை ஆகாயம் ஆலயம் ( பகுதி 6 )இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


அன்பே சிவம் - சிவமே அன்பு


திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்