இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு

 காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர்  தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணற்றில் இஸ்ரோ மையம் அமைந்துள்ளது. இதன் அருகில் தமிழக அரசின் வேளாண்மை துறையின் மலர் வணிக வளாகம் உள்ளது.


இந்த வணிக வளாகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலையில் இந்த மலர் வணிக வளாகத்தில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.


அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு, அருகில் இஸ்ரோ மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி பணகுடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்