நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 3 பேர் தற்கொலை


 


தமிழகத்தில்  காலை (செப்.,12) மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ (19) நீட் தேர்வு பயம் காரணமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


அந்த சம்பவம் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தருமபுரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.


தர்மபுரி மாவட்டம் தர்மபுரி, செந்தில் நகரைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா (20). இவர் இந்த வருடம் நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருந்தார். இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் இரண்டாவது முறை தேர்வு எழுத தயாராகி வந்தார்.


 நீட் தேர்வு அச்சத்தால் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். நாளை நீட் தேர்வு எழதவிருந்த நிலையில் மாணவர் மோதிலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


ஏற்கனவே இன்று 2 பேர் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மோதிலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.