புரட்டாசி மாத பலன் 2020 ( 7 to12 ராசி )


துலாம் :


யாவரையும் பார்த்ததும் கணித்துக் கொள்ளக்கூடிய தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே...!! சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நெருக்கமும், புரிதலும் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் புதுவிதமான கண்ணோட்டத்துடன் முயற்சிகளை செயல்படுத்தி வெற்றி அடைவீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மகிழ்ச்சியை அளித்தாலும் சூழ்நிலை அறிந்து செயல்படுவது உங்களின் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


வழிபாடு :


சனிக்கிழமைதோறும் சொர்ண பைரவரை வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவு உண்டாகும்.


விருச்சகம் :


எதையும் முன்னின்று செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...!! எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வாக்குவன்மையால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். செயல்பாடுகளில் மந்தத்தன்மை ஏற்பட்டு காலதாமதம் நேரிடலாம். நீண்ட நாள் பிரச்சனைகளை விவேகத்துடன் செயல்படுத்துவதன் மூலம் எளிதில் தீர்வுகள் கிடைக்கப்பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பணிகளும் மேம்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் மேன்மை உண்டாகும்.


வழிபாடு :


சஷ்டி தினத்தன்று முருகரை வழிபட்டு வர உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.


தனுசு :


அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய தனுசு ராசி அன்பர்களே...!! மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்களில் இருந்து தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கப்பெறுவீர்கள். சிலருக்கு புதிய வீடுகள் மற்றும் மனைகள் வாங்குவதில் இருந்துவந்த காலதாமதம் அகலும். உயர் அதிகாரிகளின் மூலம் தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த இலாபகரமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் மனைவிவழி உறவினர்களின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வது நன்மையை ஏற்படுத்தும். திருமணமான தம்பதிகளுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகளும், விளைச்சலும் மேம்படும்.


வழிபாடு :


செவ்வாய்க்கிழமைதோறும் நாக தேவதைகளை வழிபட்டு வர வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும்.


மகரம் :


சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் மகர ராசி அன்பர்களே...!! பழைய எண்ணங்களால் செயல்பாடுகளில் ஒருவிதமான காலதாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு குறைவான ஆதரவு ஏற்பட்டாலும், நிறைவான பலன்கள் விரைவில் உண்டாகும்.


வழிபாடு :


செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர உறவுகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.


கும்பம் :


எதையும் வெளிக்காட்டாமல் மறைத்து கொள்ளக்கூடிய கும்ப ராசி அன்பர்களே...!! கலகலப்பான பேச்சுக்களின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வாரிசுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பூர்வீக சொத்துக்களை விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்வதற்கான உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவும், பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் கிடைக்ககும்.


வழிபாடு :


வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.


மீனம் :


எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தப்பிக்கும் வல்லமை கொண்ட மீன ராசி அன்பர்களே...!! தொழில் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் திட்டமிட்ட சில காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். வாழ்க்கை துணைவரின் மூலம் சுபவிரயங்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். வேலையாட்கள் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நண்பர்களின் உதவிகளால் தீர்வுகள் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.


வழிபாடு :


ஞாயிற்றுக்கிழமைதோறும் விநாயகரை வழிபட்டு வர உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.