புரட்டாசி மாத பலன் 2020 ( 1 to 6 ராசி )

 மேஷம்:


மேஷ ராசி அன்பர்களே...!! வாக்கு சாதுர்யத்தால் பல விஷயங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். முயற்சிக்கேற்ப பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனைவி மற்றும் உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், அது தொடர்பான வழக்குகளில் இருந்துவந்த காலதாமதமும் அகலும்.


வழிபாடு :


செவ்வாய்க்கிழமைதோறும் எல்லை சுவாமிகளை வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவும், உத்வேகமும் கிடைக்கப்பெறுவீர்கள்.


ரிஷபம் :


கருணையுள்ளம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே...!! உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய மனைகள் மற்றும் வீடுகள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் கருத்துக்களை பரிமாறும் பொழுது சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும்.


வழிபாடு :


வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர பணி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும்.


மிதுனம் :


புத்திக்கூர்மை கொண்ட மிதுன ராசி அன்பர்களே...!! குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய லட்சியம் மற்றும் இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாரிசுகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். பணி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தொலைபேசி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள்.


வழிபாடு :


புதன்கிழமைதோறும் குருமார்களை வழிபாடு செய்து வர தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.


கடகம் :


தாயுள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே...!! குடும்ப உறுப்பினர்களின் மூலம் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கப்பெறுவீர்கள். ஆரோக்கியமான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். மனைகள் மற்றும் வீடுகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். வாரிசுகளின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு தொடர்பான பயணங்கள் மற்றும் எண்ணங்கள் ஈடேறும். வர்த்தகம் மற்றும் புதிய முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுத்தவும். திட்டமிட்ட காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே ஈடேறும். மூத்த சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.


வழிபாடு :


குலதெய்வ வழிபாடு செய்து வர வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும்.


சிம்மம் :


துணிந்து செயல்படக்கூடிய அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! குடும்ப உறுப்பினர்களிடம் கலந்துரையாடலின்போது வார்த்தைகளில் பொறுமையுடன் இருக்க வேண்டும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். தாயுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையற்ற எண்ணங்களின் மூலம் மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் ஏற்படும். மனதில் தோன்றும் கருத்துக்களையும், எண்ணங்களையும் நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.


வழிபாடு :


வெள்ளிக்கிழமைதோறும் அம்பிகையை வழிபாடு செய்து வர மனதில் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.


கன்னி :


எதையும் சமாளிக்கும் திறமை கொண்ட கன்னி ராசி அன்பர்களே...!! நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வித்தியாசமான முயற்சிகளின் மூலம் பிரபலம் அடைவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். நிர்வாகம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.


வழிபாடு :


திங்கட்கிழமைதோறும் சிவபெருமானை வழிபாடு செய்து வர ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.