ஜெயலலிதா இல்ல அவசரச் சட்டம்.. ஆளுநர் செயலாளர் பதிலளிக்க உத்தரவு


ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசுடைமை ஆக்கும் சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில்; வேதா நிலையம் அமைந்துள்ள நிலம் என்பது அவரது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.


தன்னுடைய சகோதரி தீபாவுடன் வேதா நிலையத்தில் வந்ததாகவும், பாட்டி சந்தியா மரணத்துக்கு பின் வேதா நிலையத்தில் வசித்து வந்த தன உறவினரான அத்தையான ஜெயலலிதா பல்வேறு முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளை அங்குதான் நடத்தி வந்ததாகவும், இதனிடையே ஜெயலலிதா இறந்த பின்னர் தங்களை அறிவிக்க கோரி தானும் தன் தங்கையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.


ஜெயலலிதா வேதா இல்லத்தை கையகப்படுத்த ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து தீபக் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆளுநர் செயலாளர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலாளர் 6 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.