உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி தலைவர் கொரோனாவால் காலமானார்


 


உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி தலைவர் எஸ்.ஆர்.எஸ் யாதவ் கொரோனாவால் இன்று உயிரிழப்பு.


உத்தரபிரதேச சட்டமன்றக் குழு மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் எஸ்.ஆர்.எஸ் யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 08.09.2020 காலமானார்.


இந்நிலையில் தலைவரின் மறைவுக்கு சமாஜ்வாதி கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி டிவிட்டரில் இது குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளது.


அதில்," சமாஜ்வாதி கட்சியின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர், தேசிய செயலாளர் எஸ்.ஆர்.எஸ். யாதவ் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவாகும். "புறப்பட்ட ஆத்மாவுக்கு அஞ்சலி" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், இது குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர் மறைவுக்கு கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இரங்கல் தெரிவித்தார்.