12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் 13/09/2020மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு சகல வசதியுடன் வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை


ரிஷபம்: போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களை சரியாகப் புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும்.


மிதுனம்: மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். 


கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை உண்டு. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை
சிம்மம்: பணம் ஒருபுறம் வந்தாலும் செலவுகளும் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கும். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிடாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்,இன்று துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும்.


கன்னி: எதிர்காலத்துக்கென பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் மூலம் வர வேண் டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும்.


துலாம்: பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை


விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தக்க நேரத்தில் விஐபிகளும் உதவுவார்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும்
தனுசு:மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள்.அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்காதீர்கள். வெகுதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வாகனம் செலவு வைக்கும்.


மகரம்: போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும்.


கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல்நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும்.


மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதியது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.