சென்னையில் மேலும் 1,208 பேருக்கு கொரோனா


 


தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,63,423 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் ஒரே நாளில் 936 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1,49,601 பேர் வீடு திரும்பியுள்ளனர்.


அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,166 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் மேலும் 10,616 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது