தேசிய கண் கொடை நாள் 08/09/2020


கண் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Eye) என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும்.வெளிப்புறத்தில் உள்ள பொருள்களின் அமைப்பு, நிறம், ஒளித்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றினை பார்வை உறுப்புத் தொகுதியின் மூலம் கண்கள் உணர்த்துகின்றன. 


மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. 


நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவியைப் போன்று இயங்குகிறது. 


ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது.


கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. 


மனிதனின் கண் வெளிச்சம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒர் உறுப்பு ஆகும். ஒர் உணர்வு உறுப்பாக பாலூட்டிகளின் கண் பார்வையை அனுமதிக்கிறது.


மனித கண்கள் முப்பரிமாண நகரும் உருவத்தை வழங்க உதவுகின்றன, பொதுவாக பகல் நேரங்களில் நிறங்களை உணர்த்துகின்றன. விழித்திரையில் உள்ள குச்சி மற்றும் கூம்பு செல்கள் ஒளி உணர்வு மற்றும் வண்ண வேறுபாடு ஆழ்ந்த கருத்து உள்ளிட்ட பார்வை செயல்பாஃடுகளுக்குக் காரணமாகின்றன.


மனிதக் கண் 10 மில்லியன் நிறங்களை வேறுபடுத்தி அறியும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது


தேசிய கண் கொடை நாள் (National Eye Donation Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 -ஆம் நாள் கடைப்பிடிக்கபட்டு வருகிறது.


இந்நிகழ்வு இருவாரக் கொண்டாட்டமாக ஆகத்து 25 இல் ஆரம்பித்து செப்டம்பர் 8 இல் முடிவடைகிறது. இக்காலகட்டத்தில் கண் கொடை  சிறப்புகள் பற்றிய பரப்புரைகள், பொதுக்கூட்டம், கருத்தரங்கு முகாம்கள் நடத்தபடுவதோடு, பொதுமக்களுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கம் தரும் வகையிலும்,இந்திய அரசு சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.


உலகம் முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர்.


இதில், 26 விழுக்காடு குழந்தைகள். 75 சதவீதம் பார்வை இழப்பைத் தடுக்கக்கூடியதாகும். போதிய கண் தானம் செய்வோர்கள் இல்லாமையால் இதை குறைக்க முடியவில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.


சிறப்புத் தகவல்கள்:



  • ஒரு வயது முதல், அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம்.

  • கண்கள் மாற்று அறுவை செய்ய 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையே ஆகும்.

  • கண் தானம் செய்ய விரும்புவோர், அருகில் உள்ள கண் வங்கியில் பதிவு செய்யலாம்.

  • கண் தானம் செய்தவர் இறந்ததும், உடனடியாக அவரது கண்களைமூடி, ஐஸ் அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும்.

  • உலகிலேயே இலங்கையே கண் தானம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது.

  • இந்திய தேசிய கண்தான தினம் ஆகத்து 25 முதல்- செப்டம்பர் 8 முடிய இருவார கொண்டாட்டம்.

  • 2011ல் செப்டம்பர் 8ஆம் நாள் ,அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது துணைவியார் குர்சரண் சிங் கவுர் ஆகியோர் தங்களது கண்களை தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் இட்டனர்


தேசிய அளவில் 08/09/2020 தமிழக அரசு சார்பில், கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில், http://hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை  தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.


இதன் வாயிலாக கண்தானம் செய்பவர், தானம் பெறுபவர் என ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பார்வையின்றி தவிக்கும் ஒளியிழந்தோருக்கு செய்திடும் கண் தானமானது தானத்தில் சிறந்தது.


இருக்கும் போது இரத்த தானம், இறந்த பிறகு கண் தானம்


நாம் அனைவரும் கண் தானம் செய்வோம்


நன்றி வணக்கம்


மோகனா செல்வராஜ்