இன்றைய (04/09/2020) ராசி பலன்கள்


 


மேஷம் : இன்றைய நாள்  பொறுமை இழக்கும் சூழல் உண்டாகும். அதனை தவிர்த்து பொறுமையாக செயல்பட வேண்டும். பிறருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். திருமணம், சீமந்தம் போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும்.


ரிஷபம் : இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இன்று வாய்ப்புகள் அதிகமாக காணப்படும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் லட்சியத்தை நோக்கி செயல்படுவீர்கள். உங்களின் பேச்சின் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். 


மிதுனம் : இன்றைய நாள் உற்சாகமாக அமையும். உங்களின் உறுதியான போக்கின் காரணமாக பிரகாசமான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் பேச்சின் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள். உங்கள் எதிரிகள் அடங்கி அடங்கி இருப்பார்கள்.மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.


கடகம் : இன்றைய நாள் அனுகூலமாக இருக்காது. நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள் அதனை தவிர்க்க வேண்டும். பிறருடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். பிரார்த்தனை செய்வது மன ஆறுதலை தரும்.வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும்.


சிம்மம் : இன்று நல்லது நடக்க ஏற்ற நாள் அல்ல. உங்கள் பாதைகளில் சில தடைகள் காணப்படும். கவனமின்மின்றி செயல்பட்டால் பதிய வாய்ப்புகளை இழப்பீர்கள்.விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். 


கன்னி : இன்று உங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்கள் அசாத்திய திறமை மூலம் லாபம் பெறுவீர்கள். திட்டமிட்டு உறுதியுடன் செயல்களை செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.மனோபலம் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.


துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் புத்திசாலிதனத்தினை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். நீங்கள் அதிக முயற்சியின்றி செயல்களை செய்து முடிப்பீர்கள் பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும்.


விருச்சிகம் : உங்கள் இலக்குகளை அடைவது சற்று கடினமாக இருக்கும். வெற்றி பெறுவதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள்.


தனுசு : இன்று உங்களிடம் தன்நம்பிக்கை அதிகமாக காணப்படும். மனஉறுதியுடன் காணப்படுவீர்கள். கடினமான சூழ்நிலைகளை கையாளும் தைரியம் உங்களிடத்தில் காணப்படும். நம்பிக்கையோடு இருந்தால் இன்றைய நாளை சமாளிக்கலாம். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.  தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள்.


மகரம் : உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உங்கள் கனவுகள் நிஜமாகும் நாள்.தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். 


கும்பம் : இன்று நீங்கள் பொறுமையாகவும் மன உறுதியுடனும் இருக்க வேண்டும். சில கடினமான சூழ்நிலைகள் காணப்படும். உங்கள் செயல்களில் வேகத்தை தவிர்க்க வேண்டும். நீங்கள் முன்னேற்றமடைய திட்டமிட்டு செயல்பட வேண்டும்.வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.


மீனம் : நன்றாக சிந்தித்து செயல்பட்டால் தீங்கு விளைவுகளை தவிர்க்கலாம். உங்கள் இலக்குகளை அடைவதில் கால தாமதம் ஏற்படும். பொறுமையாக செயல்களை செய்ய வேண்டும்.முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வீண் சந்தேகம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும்.


மோகனா  செல்வராஜ்