ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம்

 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக ஒரு உணவகம் திறக்கப்பட்டது. அங்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.


இதனை கண்ட மக்கள், எப்படியாவது பிரியாணி வாங்கி விட மாட்டோமா என முகக் கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின் பற்றாமலும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்து பிரியாணி வாங்கி சென்றனர்.


இதனால் அங்கு கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்