மாரியப்பனுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது


பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் பெயர் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.


இவருடன் சேர்ந்து மல்யுத்த வீரர் வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மாணிகா பத்ரா பெயரையும் தேர்வுக்குழு பரிந்துரைத்தது. இதுமட்டுமில்லாமல் விளையாட்டு துறையில் உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா பெயர் தேர்வு குழு பரிந்துரை செய்திருந்தது.


இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் 29ம் தேதி காணொளி மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி.