கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நிதி- மு.க.ஸ்டாலின்


கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவ `ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை திமுக செயல்படுத்தியது.


அதன் ஒருபகுதியாக கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தனது தொகுதி மக்களுக்கு உணவு வழங்க ‘ஒரு மாதத்தில் ஒரு லட்சம் பேருக்கு உணவு’ என்ற திட்டத்தை கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கினார்.


வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஏழை மக்களின் பசியை போக்கும் இத்திட்டத்துக்கான முழு செலவுகளையும் மு.க. ஸ்டாலின் ஏற்றுக் கொண்டுள்ளார்.


இதற்காக ஏற்கெனவே இருகட்டங்களாக ரூ. 20 லட்சத்தை சமையல் கலைஞர் துர்கா பிரசாத்திடம் ஸ்டாலின் வழங்கிஇருந்தார்.


தற்போது மூன்றாவது கட்டமாக ரூ.10 லட்சத்தை சமையல் கலைஞர் துர்கா பிரசாத்திடம் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேற்று வழங்கினார்.