நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

உச்சநீதிமன்ற நீதிபதி(ஓய்வு) திரு.A.R லட்சுமணன் மறைவு 



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் (78 ) காலமானார். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் லட்சுமணன் உயிரிழந்துள்ளார்.


சில நாட்களுக்கு முன் இவரின்  மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.


உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும்,  தமிழகத்தை பிரதிநித்துவப் படுத்தியவருமான மரியாதைக்குரிய நீதிபதி திரு.AR.லட்சுமணன் அவர்கள், (27.8.2020) அன்று காலை மாரடைப்பால் காலமானார்.


சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்துள்ள இவர் மாசு கட்டுபாடு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வழக்கு ஒன்றில் பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து உத்தரவிட்டவர்.



அன்னாரின் மறைவு  தமிழ்நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பாகும்.நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நீதித்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,' தமிழக முதல்வர் பழனிசாமி  எனத் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில் முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அதில், “தமிழ்நாட்டுக்கும் சிவகங்கை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி திரு ஏ. ஆர். லக்ஷ்மணன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.