கிராமப் பகுதிகள், மலைவாழ் பகுதிகள் போன்றவற்றில் இருக்கக்கூடிய மக்கள் தரமான மருத்துவ சேவையை பெறுவதற்காக அந்தப் பகுதிகளில் பணி செய்யக்கூடிய இளம் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ உயர் படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இதனை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதனை தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது எனவும் தீர்ப்பு அளித்துள்ளது.