தமிழகத்தில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்


கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (பி. வி. எஸ். சி. - ஏ. ஹெச்), உணவு கோழியின மற்று பால்வளத்துறை தொழில்நுட்ப படப்பிடிப்பு(பி. டெக்) ஆகிய பாட பிரிவுகளில் இணைவதற்கான பிளஸ் டூ படிப்பு முடித்த மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24முதல் நடைபெறவுள்ளது.


தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைனில் ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10 மணி முதல் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற வலைத்தளத்தை பயன்படுத்தி செப்டம்பர் 28ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.