தமிழகத்தில் பல அதிமுக, திமுக எம்எல்ஏ க்களும் கொரானா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை சீர்காழி அதிமுக எம்எல்ஏ பி.வி.பாரதி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் வருகையையொட்டி பரிசோதனை மேற்கொண்ட எம்எல்ஏ சீர்காழி அவர்களுக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.