சென்னையிலுள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆம்னி பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடினர்
இந்நிலையில் இதில் 3 ஆம்னி முழுமையாக எரிந்து நாசமடைந்துள்ளது. இரண்டு பேருந்துகள் லேசாக எரிந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்துகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.