இருசக்கர வாகன வரியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்


இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.


இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை சரிசெய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


மேலும், இருசக்கர வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 28% வரியை குறைக்க வேண்டுமென வாகன உற்பத்தி நிறுவனங்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.


சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இருசக்கர வாகன வரியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆலோசனை செய்யப்படும் என கூறினார்