நேற்று மட்டும் இ-பாஸ் நிலவரம் அரசு தகவல்


தமிழகத்தில்கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு முன்பு அறிவித்தது.


இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென  எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.


இதையடுத்து, இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் முறையை முதல்வர் அறிவித்தார்.


அதன்படி இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் நேற்று மட்டும் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது என  தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


நேற்று மாலை  நிலவரப்படி 7500 பேர் சென்னை வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.