செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி


நாடு முழுவதும் இன்று  சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில்  பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.


சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 7 -வது முறையாக கொடியேற்றினார். செங்கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.