இந்திய விடுதலை நாள் விழாவில் செங்கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். பிரதமரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
பக்குவமற்ற வயதில் வரும் காதலும், திருமணமும் பெண்களின் சாதனைகளுக்கு தடையாக உள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பெண்களின் திருமண வயது 21-ஆக உயர்த்தப் பட்டால், அது நுண்ணூட்டச்சத்துக் குறைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை .அந்த வகையில் மத்திய அரசின் திட்டம் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.
இந்நிலையில், பெண்கள் திருமண வயது வரம்பு உயர்த்தப்படும் என்ற பிரதமர் அறிவிப்புக்கு திமுக எம்.பி.கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலினை செய்யப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்றுக எனவும் கனிமொழி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது, பெண்களுக்கு திருமண வயது 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.