தமிழ் சினிமாவில் நாயகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் சரண்யா. அதனையடுத்து பல படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் இயக்குநர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த தம்பதியிருக்கு இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சரண்யா தந்தையான ஏ. பி. ராஜ் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களையும், தமிழில் துள்ளி ஓடும் புள்ளிமான், கை நிறைய காசு உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.
டேவிட் லீன் இயக்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் படமான த பிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் என்ற போர் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ஏ.பி.ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் 1957 ஆம் ஆண்டு வெளியானது. இந்த அனுபவத்தில்தான் அவர் படம் இயக்கத் தொடங்கினார்.
1951 ஆம் ஆண்டில் இருந்து 1986 வரை மலையாளத்தில் 65 படங்களை இயக்கியுள்ளார். இதில் பல ஹிட் படங்களும் அடங்கும்.
ஆரம்பத்தில் சிங்களப் படங்களை இயக்கிய இவர், பிறகு மலையாள சினிமாவுக்கு வந்தார். கல்லியல்லா கல்யாணம் என்ற படம் மூலம் மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமான இவர், பிறகு, மனசே நினக்கு மங்களம், கழுமரம், அக்னி சரம், கழுகன், அவகாசம், சூர்யவம்சன், சீமந்தபுத்ரன் உள்பட படங்களை இயக்கி இருக்கிறார். சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக, உடல் நலமில்லாமல் இருந்த இவர், சென்னையில் நேற்று காலமானார்.
அவருக்கு வயது 95. இயக்குனர் ராஜின் மனைவி சரோஜினி ஏற்கனவே மறைந்துவிட்டார்.
இவருக்கு ஜெயபால், மனோஜ் என்ற மகன்களும் சரண்யா பொன்வண்ணன் என்ற மகளும் உள்ளனர். சரண்யா பிரபல நடிகையாக இருக்கிறார். பல்வேறு படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
95 வயதான இவர் 24.08.2020 காலமாகியுள்ளார். தற்போது இவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மலையாள இயக்குனர்கள் ஹரிஹரன், ஐவி சசி, பி.சந்திரகுமார், ராஜசேகரன் ஆகியோர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பல ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.