பிற மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் மக்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும்


பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவரே தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணியில் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவு. நகராட்சி நிர்வாகம் தலைமைச்செயலாளர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தற்போது இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து சென்று விட்டு திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 


இந்நிலையில் இ-பாஸ் பெற்று வருபவர்களை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கபடும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கிருந்து வரும் மக்கள் சென்னைக்கு வருபவரை தனிமைப்படுத்த உத்தரவு வெளியகியுள்ளது.