எச். வசந்தகுமார் (1950 ஏப்பிரல் 14 28.08.2020) தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில், ஹரிகிருஷ்ண நாடார் - தங்கம்மை தம்பதிக்கு 14 ஏப்ரல் 1950ல் மகனாக பிறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில் பிறந்த வசந்த் குமார் தொடக்கத்தில் வீ.ஜி.பி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில் பிறந்த வசந்த் குமார் தொடக்கத்தில் வீ.ஜி.பி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார்.
மிகச் சிறிய முதல் பணத்தைக் கொண்டு ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.
தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்துள்ள வீட்டு உபயோகப் பொருட்களின் சில்லறை விற்பனையகமான வசந்த்&கோவின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் என்ற வகையில் பிரபலமடைந்தவர்.
இந்நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான ஹரிகிருஷ்ணன் வசந்தகுமார், கொடையாளர் மற்றும் தொழிலதிபர்.
2006 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்று தமிழக சட்டசபைக்கு தேர்வானார். 2008ஆம் ஆண்டு வசந்த டிவி எனும் தொலைக்காட்சியை துவங்கினார்.
" வெற்றிகொடிகட்டு" எனும் இவரது பிரபல சுயசரிதை புத்தகத்தை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி இணைந்து வெளியிட்டனர். மேலும் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராகவும், டிஎன்சிசி வர்த்தக அமைப்பின் தலைவராகவும் உள்ளார்
வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார். வசந்தகுமார் தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் முகாமையான தலைவர்களில் ஒருவராகவும் நாங்குநேரி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் .இவர்2019 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
தீவிர சமூக சேவகரான இவர், ஏழை மாணவர்களுக்கு இலவச டியுசன் மையங்களை அமைந்து கொடுத்துள்ளார். மேலும் தெருவோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் பயன்பெரும் வகையில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரது மனைவி தமிழ்செல்விக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால், இருவருக்கும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70.