பூசணிக்காய் மோர்குழம்பு

பூசணிக்காய் மோர்குழம்பு  - இது எனது  வீட்டு சமையல் இரகசியம். 



எனது குடும்பத்தினர்கு மிகவும் பிடித்து இருந்தது.


தேவையான பொருட்கள்
மோர் 1 1/2 கப்
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பூசணிக்காய் 1


அரைக்க
துவரம் பருப்பு 1 மேஜைக்கரண்டி ( 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும் )
அரிசி 1 மேஜைக்கரண்டி ( 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும் )
பச்சை மிளகாய் 5 
தேங்காய் 1/2 கப்
இஞ்சி 1/2 இன்ச் &  சீரகம் 1 தேக்கரண்டி


தாளிக்க
வேர்கடலை எண்ணெய்  2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் 1
பெருங்காயம் 1 சிட்டிகை
கடுகு 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை 1 கொத்து


செய்முறை :


 1. தயிரை எடுத்து நன்றாக அடித்து கொள்ளவும் இல்லையெனில் 2 அல்லது 3 தடவை சிலுப்பி ( கடைந்து ) கொள்ளவும். தயிர் சூடு செய்யும் சமயத்துல வெடித்து விடும் அதை தவிர்க்கவே கடைந்து கொள்வது அவசியமாகிறது.


2. ஒரு வடசட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை விட்டு அரைத்து கொள்ளவும்.


3. பிறகு இரண்டு மணிநேரம் ஊறவைத்துள்ள துவரம் பருப்பு, அரிசி, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.


4. இப்பொழுது இந்த அரைத்து வைத்துள்ள கலவையை அடித்து வைத்துள்ள தயிரில் கலந்து கொள்ளவும். அதில் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


5. இந்த சமயத்தில் பூசணிக்காய்  நன்றாக வேகவைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.இந்த வேகவைத்த பூசணிக்காயை அந்த தயிர் கலவையில் சேர்த்து கொள்ளவும்.


6. இப்பொழுது அந்த தயிர் கலவையை அடுப்புல வைக்கவும். சிறுதீயில் அடுப்பை வைக்கவும், இந்த கலவை சூடு ஏறியதும் நுரைக்க ஆரம்பிக்கும் கொதிக்கும் முன் அடுப்பை அணைத்து விடவும்.




7. இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடித்ததும், அதில் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும், பின்பு அதில் பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், அதில் பொடித்த வரமிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இந்த தாளிப்பை தயிர் குழம்புல சேர்க்கவும்.


குறிப்பு:


1.காய்கறிகளை தனியாக தேவையான உப்புத்தூள் சேர்த்து வேகவைத்து பின்னர் குழம்புல சேர்த்து கொள்வது சுவை கூடும்.


2. குழம்பு கொதிக்க வைக்க கூடாது. மூடியை மூடியும் கொதிக்க வைக்க கூடாது. குழம்பு நீர்த்து போடுவதை தவிர்க்கலாம்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா