மதுரை அரசு மருத்துவமனைக்கு ஓபிஎஸ் பாராட்டு


இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை மதுரை அரசு மருத்துவமனை காப்பாற்றியது மகிழ்ச்சி - துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.


இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


அதில், இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில், தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கர்ப்பிணிக்கு இறுதி தருவாயிலும் நம்பிக்கையூட்டி மறுவாழ்வு அளித்த மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.