நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம்


நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஹரிஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.


கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு அடிப்படையில் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.