விரைவில் குணமடைய அமித்ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்


மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.


கடந்த 3-4 நாட்களாக சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக மீண்டும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அதில் மாண்புமிகு மத்திய அமைச்சர் அமித்ஷா ஜி அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.


அவர் குணமடைந்து தனது அன்றாட கடமைகளை மீண்டும் தொடங்கி நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.