கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பொது போக்குவரத்து முடக்கத்தால் தனி மனித வாகன பயன்பாடு, அதாவது இருசக்கர வாகனங்கள் சாலைகளில் அதிகரித்துள்ளது.
மேலும் பல ஏழை, எளிய மக்கள் பொது போக்குவரத்தை நம்பி இருந்தனர். தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்கு ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் திருமணம், மரணம் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியை அதிகம் பணம் கொடுத்து நாடுகின்றனர். இதனை எல்லாம் கணக்கில் கொண்டு தமிழகத்திலும் பொது போக்குவரத்தை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களாக தடை செய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.