ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மதுரையை சேர்ந்த பூரண சுந்தரிக்கு கண் பார்வை கிடைக்க திமுக எம்எல்ஏ அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.
மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த செல்வி.பூரண சுந்தரி அவர்கள் IAS தேர்வில் இந்திய அளவில் 286வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
அவர் சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு இருந்த போதும் IAS தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 18.08.2020 அன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, இணையதளம் மூலம் அந்த பெண்னிற்கு eSIGHT என்ற சுமார் 8 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்ணாடியினை கனடா நாட்டில் இருந்து வரவழைத்து பார்வை கிடைக்க செய்யலாம் என்று திமுக எம்எல்ஏ சரவணன் திட்டமிட்டிருந்தார்..
அதிநவீன ORBIT READER என்ற எளிதாக படிக்க உதவும் BRAILLE கருவியினையும் வழங்க உள்ளோம். சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் இது போன்று கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் ELECTRONIC GADGETS பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என திமுக எம்எல்ஏ சரவணன் தெரிவித்துள்ளார்.