பட்டியலின ஊராட்சிமன்ற செயலாளர் சஸ்பெண்ட்- மாவட்ட ஆட்சியர் அதிரடி


திருவள்ளூர் அருகே பட்டியலின ஊராட்சி தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத வழக்கில், ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார்.


அதுமட்டுமின்றி, ஊராட்சிமன்ற துணை தலைவரின் கணவர் உட்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஆத்துப்பக்கம் ஊராட்சி தலைவரை அழைத்து நேரில் விசாரிக்கவுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மேலும், அந்த சம்பவம் குறித்த செய்தி சேகரிப்பின் போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் எழில் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ஊராட்சிமன்ற செயலாளர் மற்றும் துணைத்தலைவரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.