இன்றே கடைசி நாள்


 


கடந்த 16-ம் தேதியுடன் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடிந்தது. தமிழகத்தில் மொத்தமாக 1,60,834பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.


இது கடந்த ஆண்டு விண்ணப்பப்பதிவைவிட 2,000 பேர் அதிகம். விண்ணப்பப்பதிவு செய்தவர்களில் 1,33,000 -க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.


விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்றே கடைசிநாள் ஆகும்.