இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர் நியமனம்

 ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக உள்ளவர்  திவாகர் குப்தா. இவரின் பதவிக்காலம் வருகின்ற 31-ம் தேதியுடன் முடிய உள்ளதால், அந்த பதவி அசோக் லவாசாவுக்கு வழங்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவர் பதவியை அசோக் லவாசா ஏற்றுக்கொண்டார்.


இதனால், தேர்தல் ஆணையர் பதவியை லவாசா ராஜினாமா செய்து, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அசோக் லவாசாவின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டு, காலியாக  இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராஜீவ் குமார் முன்னாள் நிதித்துறை செயலராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.