தாமிரபரணி & மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு


தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டிற்காக ஆகஸ்ட் 18 முதல் 31 வரை 1,693.44 மி.கன அடி நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


மேட்டூர் அணையிலிருந்து வரும் 18 ஆம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். வரும் 18 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை, அதாவது 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.